Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


உயர்தர பரீட்சார்த்திகள் இருவரிடமிருந்து தொலைபேசி மீட்பு

Go down

உயர்தர பரீட்சார்த்திகள் இருவரிடமிருந்து தொலைபேசி மீட்பு

Post by oviya on Tue Aug 11, 2015 2:51 pm

கல்முனையில் க.பொ.த உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சார்த்திகள் இருவரிடமிருந்த இரு கையடக்கத் தொலைபேசிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
கல்முனை அல்மனார் மத்திய மகா வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில், பரீட்சை எழுதிய மாணவர் ஒருவரிடம் இருந்தும்,

மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில், பரீட்சை எழுதிய மாணவரிடமிருந்தும் கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய பெறுபேறுகள் தடை செய்யப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை மத்திய நிலையத்தில் சரியான முறையில் கண்காணிப்பு நடக்காமையினால் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பான, மத்திய நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பரீட்சை சட்டதிட்டங்களை மீறும் வகையில் நடந்துகொள்ளும் அனைவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum