Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடாதவர்கள் இருக்கின்றனர்!– அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

Go down

சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடாதவர்கள் இருக்கின்றனர்!– அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

Post by oviya on Sun Aug 09, 2015 3:31 pm

திருடர்களை பற்றி பேசி, குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரண்டு மேடைகளை அமைத்து இரு பக்க தவறுகளை கூறிக் கொள்ளலாம் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இறுதியில் எந்த தரப்பு அதிக குற்றங்களை செய்துள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே குறைந்தளவு குற்றங்களை செய்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும் எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆட்சியில் இருந்த அரசாங்கத்தில் குறைகள் இருந்ததன் காரணமாக நாங்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திருடர்களும், குற்றவாளிகளும் இருக்கும் கட்சியல்ல. எமது கட்சிக்கு நாட்டுக்கு கெடுதல் செய்யும் கட்சியல்ல. ஆனால், எமது கட்சியாலும் தவறுகள் நடந்துள்ளன.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடாதவர்களும் இருக்கின்றனர் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum