Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள் கணக்கு -1

Go down

இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள்  கணக்கு -1 Empty இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள் கணக்கு -1

Post by ram1994 Wed Dec 24, 2014 8:33 pm

இந்து தர்மத்தின்படி பிறப்பவர்கள் இறக்கிறார்கள், இறப்பவர்கள் பிறக்கிறார்கள். அது போல ஆத்மாவை அழிக்க முடியாது. அது ஊடுறுவி அமர்ந்து கொள்ளும் அதன் உருவங்கள் மட்டுமே மாறும் போன்றவற்றைப் பற்றி பகவத் கீதை போன்றவற்றில் விளக்கமாகவே கூறப்பட்டு உள்ளது. ஜனன மரணம் மற்றும் ஆத்மாக்களைப் பற்றிய விவரங்கள் கருட புராணம், பத்ம புராணம், பாகவதம் போன்றவற்றிலும்  காணப்படுகின்றது. அவற்றை எல்லாம் படித்தும், நான் கேட்டறிந்தவற்றைக் கொண்டும்  இறந்தவர்களையும், இறக்கும் நிலையில் உள்ளவர்களையும் பிழைக்க வைத்து உயிர் பிச்சை தர முடியுமா என்பது பற்றி சில  தகவலை கூறுகிறேன். படியுங்கள்.
ஒருவர் இறந்தப் பின் உடனேயே அவர் ஆத்மா அங்கிருந்து சென்று விடாது. பத்து மாதத்தில் ஒரு குழந்தை பிறந்து விடுவது போல பத்து நாட்களில் அதை இன்னொரு பிறவி எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக இறந்தவர் உடலை விட்டு வெளியேறிய ஆத்மாவை பத்து நாட்கள் அதை அந்த இடத்திலேயே சுற்றித் திரிய யமதர்மராஜர் அனுமதித்து உள்ளார். இதன் காரணம் யமதர்மராஜருக்கும் அந்தக் கணக்குகளைப் பார்த்து முடிக்க பத்து நாட்கள் அவகாசம் வேண்டி உள்ளதாம். (யமனுக்கும் பத்து நாட்கள் வேண்டும் என்பது ஒரு வாய் வார்த்தைக் கணக்கே. பத்து என்ற எண்தான் முக்கியம்) . மேலும் உடலை விட்டு வெளியேறிய அந்த ஆத்மாவை பிரபஞ்சத்தில் சுற்றித் தெரியும் மற்ற தீய கணங்கள் சூழ்ந்து கொண்டு தம்முடன் பிடித்து வைத்துக் கொள்ளும்போது அவற்றின் பிடிகளில் இருந்து அந்த ஆத்மாவை மீட்டு அது நற்கதிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக  பத்து நாட்கள் மந்திரங்களை ஓதி சில சடங்குகளை செய்யும்போது அனைத்து  தீய ஆவிகளும் கணங்களும் அதை விட்டு விலகி விட அந்த ஆத்மா தூய்மையாகி தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி விடுகின்றது.
இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள்  கணக்கு -1 Ghosts
இறந்து போனவர் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை
முதல் பத்து நாட்களும் சுற்றித் திரியும் ஆவிகள்/கணங்கள்

அப்போதுதான் யமதர்மராஜர் அந்த ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் சென்று அதன் கணக்கு, வழக்குகளைப்  பார்த்து அது செல்ல வேண்டிய இடத்தை நிர்ணயிக்கின்றார். அது மீண்டும் எப்போது பிறப்பு எடுக்கும்? அப்படி பிறப்பவற்றுக்கு அதன் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை மீறி  உயிர் பிச்சை கிடைக்குமா?? இப்போது கீழே உள்ளதை கவனமாகப் படியுங்கள்.
ஆத்மா, பரமாத்மா எனும் ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு பிரும்மனால் படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி   ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது  சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம்.  ஒவ்வொரு  ஆத்மாவும்  படைக்கப்பட்டவுடன் அதற்கு 13 ஜென்ம காலங்கள், அதாவது -781- ஆண்டுகள் வாசம் என்ற வாழ்கை நிர்ணயிக்கப்படுகின்றது.  781 ஆண்டுகளைக் கடந்ததும்  யமலோகத்துக்கு செல்லும் அந்த ஆத்மாக்கள் ஆத்மா அழிந்து விடாது. மாறாக சில காலம் எந்த ஜென்மமுமே  கொடுக்கப்படாமல் பிரும்ம லோகத்தில் தங்க வைக்கப்பட்டு  சில காலம் கழிந்ததும் இன்னொரு 13 ஜென்ம காலத்தை எடுக்க அது அனுப்படுகின்றது. அந்த இரண்டு ஜென்ம காலங்களில் உள்ள ஆத்மாக்களுக்கு எந்த சம்மந்தமே இருக்காது. (ஜென்ம காலத்தின் வருடக் கணக்கை படத்தில் காணவும்).
இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள்  கணக்கு -1 <img width=" />" />

13 ஜென்ம காலத்தினை விளக்கும் உதாரணப் படம்.
இதில் காட்டப்பட்டு உள்ளதைப் போல ஆத்மா வரிசையாக  
ஒரு வருட காலம் முதல் படிப்படியாக 10 , 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110,
மற்றும் 120 என பிறப்பு எடுப்பது இல்லை.  அந்த வாழ்கை காலம்
எப்படி வேண்டுமானாலும் மாறி அமைந்து இருக்கும்.
இது ஒரு உதாரணப் படம்தான்.  ஆனால் ஆத்மாவின்
மொத்த ஜென்ம காலம் 13 மற்றும் மொத்த வாழ்வு காலம் 781 வருடங்கள்தான்.

ஒவ்வொரு ஆத்மாவும் அந்த பதிமூன்று ஜென்ம காலத்தில் ஒன்று முதல் 120 ஆண்டுகள் வரை வாழும். அதாவது ஒரு வருட காலம் முதல் 120 வருடங்கள் ஆயுளைக் கொண்ட 13 நிலைகளை  781 ஆண்டுகளில் அது எடுக்கும். அப்போது ஒவ்வொரு  பிறப்பிலும்  அது எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற தலைவிதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதோ அத்தனை ஆண்டுகள் வாழும். ஆனால் எத்தனை ஆண்டுகள் எந்தப் பிறவியில் அது இருந்தாலும், வாழ்ந்தாலும் அந்த ஆத்மாவின் மொத்த ஜென்ம வருடம் 781 தான். மேலும் அவற்றின் வாழ்க்கைக் காலம் வரிசையாக ஒரு வருட காலம் முதல் படிப்படியாக 10 , 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, மற்றும் 120 என்று இருக்காது. அது 30 , 20, 10, 100, 50, 60, 70, 80, 90, 40, 120, மற்றும் 110 என்றும் இருக்கும் அல்லது 120 , 20, 50, 80, 10, 60, 70, 100, 90, 40, 30, மற்றும் 110 என்று அல்லது எப்படி வேண்டுமானாலும்  இருக்கும். அது பிரும்மனைப் பொறுத்து அமையும். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும் .
இந்து மதப்படி ஆத்மா வாழ்நாள்  கணக்கு -1 Untitled6

இந்த நிலையில்  இறந்தவர்களையும், இறக்கும் நிலையில் உள்ளவர்களையும் பிழைக்க வைத்து உயிர் பிச்சை எப்படி தரப்படுகின்றது என்பதைப் பாருங்கள்.   உதாரணமாக 13 ஜென்ம காலத்தை எடுத்து வந்துள்ள ஒரு ஆத்மா அதன்  ஐந்தாம் ஜென்ம காலத்தில் (பிறவியில்) 40 வருட காலம் வாழும் வகையில் அல்லது அதன் பதினோராம் ஜென்ம காலத்தில் 100 வருட காலம் வாழும் வகையில் பிறப்பு எடுத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த காலகட்டத்தின் முடிவில் அதாவது 40 அல்லது 100 ஆம் வருட முடிவில் அதன் வாழ்கை முடியும் நிலை வந்து  விட அது வசிக்கும்  உடலின் உறவினர் அந்த ஜீவன்  மரணம் அடையக் கூடாது என வேண்டிக் கொள்ளும்போது  யாகங்களை செய்வதினாலோ ,  யாராவது முனிவர்கள் அல்லது மகான்கள் மூலம் மகிமைக் கிடைத்து  அது உயிர் பிழைத்து விடுமா என்றால், முடியும் என்பதே சரியான பதில்.  ஆனால் அந்த முனிவரோ, மகானோ, செய்யப்படும் யாகங்களோ  அவ்வளவு சக்தி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும், தேவ சக்திகளுடன் இணைந்து உள்ளவர்களாக   இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் ஜனன-மரணத்தை 'மறு சரிக் கட்டல்' செய்ய அதை நிர்ணயிப்பவரிடம் பேசி (அவர் யமதர்மராஜன் என்று கூறினார்) உயிர் பிச்சை தர முடியும் என்றார் . அது எப்படி நடக்கும் ?

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum