Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை

Go down

முதல் - திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை Empty திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை

Post by oviya Sat Apr 18, 2015 9:28 am

திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை என்ற ராஜபாட்டை பக்தியின் வெளிப்பாடான சில கோயில்களுக்கு நம்மை அழைத்துச் செல்லப்போகிறது. இது தலங்களுக்கும் உண்டான தொடர்பை சங்கிலித் தொடரான இந்தக் கோயில்கள் உணர்த்துவதோடு அவற்றின் மேன்மையையும் வலியுறுத்துகின்றன. என்ன தொடர்பு அது? யாரால் உண்டான தொடர்பு அது? அந்தத் தொடர்பின் மகத்துவம் என்ன? முன்னுரைத் தொடக்கமாக அந்த விளக்கத்தை முதலில் காணலாம்.
அஜநாப வர்ஷம், பாரத வர்ஷம், பரத கண்டம், பாரத தேசம், இந்தியா என்று பல்வேறு திருப்பெயர்களில் அழைக்கப்படும் நம் நாடு மிகவும் ஆச்சரியமானது.

மேலோட்டமாகப் பார்ப்ப வர்களுக்கு இந்த தேசத்தைப் பற்றிய அருமை புரியாது என்பது உண்மை. இந்த தேசத்தின் ஜீவநாடியாக, அடிநாதமாக ஆன்மிகம் என்கிற உயரிய மரபு பல யுகங்களாக உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆன்மிக மரபுதான் நம் தேசத்தை தனித்து அடையாளப்படுத்திக் காட்டும் அற்புத விஷயமாகும். சரி, இந்த ஆன்மிகம் எதை மையமாக வைத்து நிறுவப்பட்டுள்ளது? வேதங்களைக் கொண்டு. இந்த வேதங்கள் ஒருவரை வேதாந்தத்திடம் கொண்டுபோய் சேர்க்கின்றன. எப்படி?

வேதங்கள் கர்ம காண்டம். ஞான காண்டம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. வேதங்கள் சொல்லும் கர்மாக்களை ஏதோ ஒருவிதத்தில் இந்த தேசத்தில் உள்ளவர்கள் செய்து கொண்டுதான் இருப்பர். அல்லது அதை நோக்கியே செலுத்தப்படுவர். இந்த கர்மாக்களை செய்து சித்தசுத்தி என்கிற மனமாசுக்கள் இல்லாத நிலையை அடைந்தோர் வேதங்கள் இறுதி பாகமான வேதாந்தத்திற்குள் நுழைவர். வேதங்கள் யாரால் இயற்றப்பட்டன? எவராலும் இயற்றப்படவில்லை? அண்டம் என்னும் அகண்டத்திலிருக்கும் மந்திரங்களை ரிஷிகள் கிரகித்தார்கள். அவற்றை வியாஸர் நான்காகப் பிரித்துத் தொகுத்தார்.

இவ்வளவு விஷயங்களும் எப்படி ஒருவருக்குப் புரியும்? ஒரு பாமரனால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா? ஏதோ வேண்டாவெறுப்பான கணக்குப் பாடம்போல கசக்குமோ? இந்த வழியில்தான் இந்திய ஆன்மிக மரபை புரிந்து கொள்ள வேண்டுமா? வேறு வழியே இல்லையா? இருக்கிறது. வேதங்களையும், அவற்றின் சூத்திரங்களையும் நமது தேசம் அழகாக எளிமைப்படுத்தியிருக்கிறது. கர்ம காண்டம், ஞான காண்டம் என்கிற பெயரைக் கூட சொல்லாது கைமேல் கனியாக புராணங்கள் எனும் கதை ரூபத்தில், கடினமான விஷயங்களை கொழுக் கட்டைக்குள் பூர்ணம்போல கொடுத்திருக்கிறது.

இந்த தேசத்தின் ஆன்மிக மரபையும், கலாசாரத்தையும், தர்மங்களையும், வேத, வேதாந்தங்களையும், யோக ரகசியங்கள் அனைத்தையும் கதை எனும் எளிய சர்க்கரை தடவியே ஆதிநாளிலிருந்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாபெரும் வேதாந்தக் கருத்துகளைத் தன் குழந்தைக்கு சோறு ஊட்டும்போது ஒரு தாய் கதையாகச் சொல்லி விடுவாள். வயதாக ஆக, அந்தக் கதைகள் மீது நம்பிக்கை பிறக்கும்; பிறகு அது என் னதான் சொல்கிறது என்று தேடல் ஆரம்பிக்கும். பிறகு ஒரே கதைக்குள் இத்தனை விஷயங்களா, இவ்வளவு ஆழமானதா என்று விழியை விரிக்க வைக்கும்.

அப்போதே அந்தக் கதை குருவாக ஆச னமிட்டு இருதயத்தில் அமரும். அதுவே மெல்ல போதிக்கவும் தொடங்கும். தானே சீடனாகி தன் வாழ்க்கையை கதையின் ஆழத்திற்குள் செலுத்தி பயணப்படவும் இயலும். விதைக்குள் ஒளிந்தி ருக்கும் விருட்சம்போல கதைக்குள் ஒளிந்திருக்கும் ஆன்மிக சூட்சுமம் புரியும். இப்போது அந்தக் கதை பல்வேறு பரிமாணங்களில் தன்னிலிருந்து கிரணங்களை பாய்ச்சியவாறு தரிசனம் அளிக்கும். கூம்பிய தாமரை இதழ்கள் விரிவதுபோல கதையின் ஒவ்வொரு இதழையும் தத்துவ நோக்கில் பிரிக்கப் பிரிக்க மலர்ந்த தாமரையாக இறை தரிசனம்வரை செல்ல முடியும்.

ஏனெனில், இந்தக் கதை எனும் விதைக்குள் வீரியமாக மகான்கள், ஞானிகள் தமது சக்தியை, தம் பேரருளை பொதிந்து வைத்திருக்கிறார்கள் எனும் உண்மை இறை தரிசனம் பெறும்போது தெரியவரும். இதற்கு உதாரணங்களாக இராமாயணம், மகாபாரத இதிகாசங்களையும் ஸ்ரீமத்பாகவதயும் கூறலாம். அப்படியானால் கதையை மட்டும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? பொதுவாகவே நல்ல கதையை ஊன்றிக் கேட்டவர்களால் அதோடு நிற்க முடியாது. கதையின் மையமான இறை எனும் விஷயம், மாபெரும் ஆத்ம வஸ்துவாக, ஆங்காங்கே கோயில்களாக நிலைபெற்றிருப்பதை கதை கேட்டவன் நன்கு அறிவான். ‘இப்போது நீ கேட்டாயே இந்தக் கதை எங்கு நடந்தது தெரியுமா?‘ என்று ஓர் இடத்தையும் அது சுட்டிக் காட்ட இயலும்.

ராமாயணத்தை பருகியவர், ராமர் கோயிலை நோக்கி யாத்திரையைத் தொடங்குகிறார். ஈசனின் அளவிலா மகத்துவத்தை கேட்டவர் சிவாலயத்தை நோக்கி நகருவார். இப்போது கதை, அதற்கு நிரந்தர சாட்சியமாக, ஒரு கோயிலாக உருக்கொள்கிறது. கோயிலின் மீதான ஈர்ப்பு பக்தியாக பரிமளிக்கிறது. பக்தி முதிர்ச்சியடைந்து பிரேமை எனும் பித்தாக ஒருவரைச் சூழ்ந்துகொள்கிறது. மெல்ல மெல்ல அது அந்த ஜீவனை உருக்குகிறது. பித்து பிடிக்க வைக்கிறது. ஏக்கம் கொள்ள வைக்கிறது. அந்த பக்தியே ஞானம் எனும் பேரறிவாக ஒளிர்ந்து அந்த ஜீவனின் அகங்காரத்தை அழிக்கிறது.

பக்தி என்பதே ஞானத்தின் ஈர்ப்பு சக்தியாக செயல்படுவதுதான். ஞானம், இருப்பு என்றால், பக்தி என்பது அதனை இழுப்பதாகும். இறையை காணவேண்டுமெனில் அகங்காரம் அழிய வேண்டும் என்கிற விஷயத்தை ஒரு சிறிய கதை மிக எளிமையாக போதித்தது. பின்னாளில் அதை காதால் கேட்ட ஒரு ஜீவனையே மோட்சத்திற்கு அழைத்துச் சென்றது. இதுவே நம் நாட்டில் நடக்கும் மிக சூட்சுமமான வேள்வியாகும். எனவேதான் முனிவர்கள், ரிஷிகள், ஞானிகள், பாகவதர்கள் அனைவரும் முதலில் கதையைக் கேட்கச் சொல்கிறார்கள்.

இதைத்தான் ஆதிசங்கரர் தனது முதல் போதனையாக ஸ்ரவண பக்தி, அதாவது காதால் அமுதமயமான இறைவனின் கதைகளை கேட்பது என்று வைத்தார். அழகுத் தமிழில் ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்று கேட்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஸ்ரீமத் பாகவதம், ‘தவ கதாம்ருதம் கிருஷ்ணா....’ என்று கதை கேட்பதை ஒரு தவமாகவே சொல்லியிருக்கிறது. திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரையிலான இந்த தொடரில், ஒரு சிறிய கதையே அதன் பல காட்சிகளே தலங்களாக, கோயில்களாக விரியும் அதிசயத்தை உணரலாம்.

அந்தக் கதைதான் என்ன?

வெள்ளிச் சிகரங்களைக் கொண்ட கயிலாயம். கற்பக வனங்களும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட உயர்ந்த ஸ்தம்பங்கள் கம்பீரமாக நிற்கின்றன. அங்கே விசாலமான சபா மண்டபத்தை நோக்கிச் சென்றாள் அம்பிகை பார்வதி. அங்கே ஈசன் தனிமையில் அமர்ந்திருந்தார். கண்கள் இமைக்காது திறந்திருந்தன. ஈசனோடு விளையாட வேண்டுமென்கிற விருப்பத்தை அந்தத் தனிமைச் சுதந்திரம் பார்வதிக்கு கொடுத்திருந்தது. ‘இதென்ன கண் சிமிட்டாமலேயே இருக்கிறாரே!’ என்று யோசித்த பார்வதி ஈசனின் கண்களை மிருதுவாக மூடினாள். சட்டென்று பிரபஞ்சத்தின் இயக்கம் முற்றிலும் தடைபட்டது.

சூரிய, சந்திரரே ஈசனின் திருக்கண்களாக இருப்பதால் பிரபஞ்சம் இருளில், இனம் புரியாத வேதனையில் மூழ்கியது. பார்வதி தேவி சட்டென்று கைகளை விடுவித்து விலக்கிக் கொண்டாள். ஈசன் மீண்டும் கண்களைத் திறந்தார். பிரபஞ்சம் ஒளி பெற்றது என்றாலும், சட்டென்று கோபம் கொண்டார். வேகமாகப் பேசத் தொடங்கினார்: ‘‘பார்வதி, விளையாட்டு எத்தனை விபரீதமாயிற்று பார்த் தாயா? நீ செய்தது மிகப் பெரிய தவறு. அதுமட்டுமல்ல பாவமும் கூட!’’
‘‘தயவு செய்து என்னை மன்னியுங்கள். விஷயத்தின் தீவிரம் புரியாது விளையாடிவிட்டேன்.

தாங்களே இதற்குரிய வழிகளையும் கூற வேண்டும்’’ என்று கண்களில் நீர் மல்கப் பதிலளித்தாள். ‘‘என்னுருவான உன் பொருட்டு சொல்ல எனக்கு எந்த வழி உள்ளது? ஆனாலும் உலகத்தை அனுசரித்து உனக்குப் பிராயச்சித்தத்தை உரைக்கிறேன். பூவுலகில் ஏழு மோட்ச புரிகளில் ஒன்றான காஞ்சிக்குச் செல். கம்பா தீர்த்தம் எனும் புண்ணிய தீர்த்தமும், மாமரமும் அங்கே உண்டு. அந்த மரம் எப்போதும் இளமையானது. அதன் கீழமர்ந்து தவமியற்று. மீண்டும் சரியான காலத்தில் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன்’’ என்று ஆசி கூறினார் ஈசன்.

கதையின் மேலடுக்கு இது. இதற்குள் எத்தனை உள்ளடுக்குகள் உள்ளன என்பதையும் பார்ப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம். முதலில் ஈசனின் கண்களை பார்வதி பொத்தினாள் என்பதே விளையாட்டான விஷயமில்லை. ஒரே பிரம்மமாக அசலமற்றிருக்கும் சிவத்தை, சக்தி சலனப்படுத்துவதையே இது குறிக்கிறது. அதாவது ஞானமே உருவாக இருக்கும் பிரம்மத்தை, மாயை எனும் இருள் மூடியதுபோல ஒரு தோற்றத்தை காட்டுவதே இந்த நிகழ்வு. இங்கு சூரியன், சந்திரன் என்பது, ஞான சூரியனும், ஞான அமுதத்தை பொழியும் சந்திரனுமேயாகும்.

இடையறாத ஞானப் பொழிவை சக்தி இடைநின்று தடுப்பதே ஜீவர்களுக்குப் பெருந்துயர் அளிப் பதாகும். மேலும், சக்தி கண்ணைப் பொத்தினாள் என்பதே பிரிவற்ற ஏகமாக உள்ள சக்தியானது சிவத்திலிருந்து தான் அந்நியமானது போன்ற ஒரு பாவனையை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்கிறது. தோற்றமாத்திரமான பிரம்மையை சக்தி அடைகிறது. இனி சக்தியானவள் மீண்டும் சிவனோடு சேரவேண்டும். சேருவதற்குண்டான அந்த கிரியைகளைத்தான் தியானம், தவம், பூஜை, வழிபாடு, பக்தி என்றெல்லாம் அழைக்கிறோம். தேவி மகாத்மியம் இதை சக்தியின் மகாலீலை என்கிறது.

தானே தன்னை தொலைத்துக் கொண்டு மீண்டும் தன்னையே வந்தடைகிறது என்கிறது. அப்படிப் பார்த்தோமானால் நாமும் அந்த சக்தியின் திவலைதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எப்போதோ நாம் சிவத்திலிருந்து பிரிந்திருக்கிறோம். இப்போது இணையப் போகிறோம். இதற்கு நடுவே உடல், உலகம், மாயை என்று எத்தனை கட்டுகள்! இவை அனைத்தையும் எப்படி உடைப்பது என்பதற்காகவே அந்த பார்வதிதேவி பூவுலகிற்கு வருகிறாள். அதுவும் நம் பிரதிநிதியாக வருகிறாள்!

பார்வதிதேவி தன் தவறு புரிந்து பரிதவித்தாள். ஈசனோடு இணைய வேண்டுமே என்று பெருங்கவலை கொண்டாள். பூலோகத்திலுள்ள பெரும் நகரமான காஞ்சி என்கிற கச்சியை நோக்கிச் சென்றாள். அந்த அடர்ந்த மாமரங்கள் சூழ்ந்த இருள் காடுகளிடையே மெல்லிய பூவாய் மென்மையாய் வந்திறங்கினாள். அங்கிருந்த ஒற்றை மாமரத்தடியில் நின்றாள். அண்ணாந்து அந்த மரத்தையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum